
தான் வேலை செய்யும் நிறுவனத்தில் 365 நாட்கள் ஊதியத்துடன் சேர்ந்த விடுப்பை குலுக்கலில் வென்றுள்ளார் ஒருவர்.
சீனாவைச் சேர்ந்த அவர், நிறுவனத்தின் நிர்வாகி பொறுப்பில் இருக்கிறார். ‘365 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு’ என்ற ஒரு பெரிய காசோலையுடன் அவர் போஸ் கொடுக்கும் வீடியோ சமீபத்தில் வைரலானது.
அவர் பணிபுரியும் நிறுவனம் ஏற்பாடு செய்த இரவு விருந்தில் கலந்துகொண்டுள்ளார். அங்கே நடந்த குலுக்கல் விளையாட்டில் தான் அவருக்கு இந்த லாட்டரி அடித்துள்ளது.
‘இது சும்மா விளையாட்டு தான்… இதெல்லாம் நிஜத்தில் நடக்காது’ என்று கடந்துவிடாதீர்கள். இந்தக் குலுக்கலில் என்ன வெற்றி பெற்றாலும், அது அப்படியே கொடுக்கப்படுமாம். அப்படி பார்த்தால் இந்த நபருக்கு விடுப்பு அப்படியே கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
‘வாய்ப்பா?’ என்று குழப்பம் வேண்டாம். அந்த நபர் இந்த வாய்ப்பை அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது அவர் இதைப் பணமாகவும் மாற்றிக்கொள்ளலாம். இது அவரின் கையில் தான் உள்ளது.
கொரோனா பேரிடரால் சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு மீண்டும் இந்தக் குலுக்கல் விளையாட்டு நடத்தப்பட்டுள்ளது. அதில் தான் இந்த நபருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.
சீனாவில் இந்த மாதிரியான விளையாட்டுகள் புதிதல்ல. 2022-ம் ஆண்டு கூட, இன்னொருவர் இந்த மாதிரியான பரிசை வேறு நிறுவனத்தில் பெற்றிருக்கிறார்.
ஆக, உங்க ஆபீசில் இந்த மாதிரி ஒரு விளையாட்டு நடத்தினால், நீங்கள் எதை வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? கமென்ட் செய்யுங்க மக்களே!