• May 18, 2025
  • NewsEditor
  • 0

இங்கிலீஷ் வெஜிடபிள்ஸ் எனப்படும் மலை காய்கறி உற்பத்தியில் சிறந்து விளங்கும் மாவட்டங்களில் ஒன்றான நீலகிரியில் சைனீஸ் ரக காய்கறிகளையும் விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர்.

குறிப்பாக சைனீஸ் கேபேஜ், புரோக்கோலி, ஹைஸ்பெர்க், லெட்யுஸ், ஸ்பிரிங் ஆனியன், சுக்குனி, பார்சிலி, செல்லரி போன்ற சைனீஸ் ரக காய்கறிகளைப் பயிரிட அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சைனீஸ் காய்கறிகள்

நீலகிரி மலைக் கிராமங்களில் விளைவிக்கப்படும் சைனீஸ் ரக காய்கறிகளைச் சந்தைப்படுத்துவதற்காக ஊட்டி நகராட்சி சந்தையில் அரசு கூட்டுறவு மற்றும் தனியார் மொத்த விலை ஏல மண்டிகள் செயல்பட்டு வருகின்றன.

ஊட்டியிலிருந்து நாட்டின் பல பகுதிகளுக்கும் சைனீஸ் காய்கறிகளை அனுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களாக சைனீஸ் காய்கறிகளின் கொள்முதல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

காரணம் குறித்துத் தெரிவிக்கும் சைனீஸ் காய்கறி மொத்த வணிகர்கள், “மே மாதங்களில் சைனீஸ் ரக காய்கறிகளின் தேவை தென்‌மாநிலங்களில் மட்டுமின்றி வடமாநிலங்களிலும் அதிகம் இருக்கும்.

ஆனால், ஏப்ரல், மே போதிய மழைப்பொழிவு இருக்காது எனக் கருதிய விவசாயிகள் சைனீஸ் ரக காய்கறிகளின் சாகுபடி பரப்பளவைக் குறைத்துள்ளனர்.

சைனீஸ் காய்கறிகள்
சைனீஸ் காய்கறிகள்

ஆனால், எதிர்பாராத வகையில் கடந்த இரண்டு மாதங்களாக அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் சைனீஸ் காய்கறிகளில் அழுகல் பாதிப்பும்‌ ஏற்பட்டு வருகிறது.

வழக்கமான தினசரி வரத்தும்‌ கணிசமாகக் குறைந்து வருகிறது. இதன் காரணமாகவே விலை அதிகரித்து வருகிறது ” என்றனர்.

விலை உயர்வு குறித்துத் தெரிவித்த விவசாயிகள், “வழக்கமாக ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையாகும் புரோக்கோலி கடந்த ஒரு வாரமாக ரூ.250 க்கு விற்பனையாகி வருகிறது.

சைனீஸ் காய்கறிகள்

அதிகபட்சமாக ரூ.40 க்கு விற்பனையாகி வந்த மஞ்சள் சுக்குனி‌ தற்போது ரூ‌.85 க்கு விற்பனையாகி வருகிறது. இதேபோல் சைனீஸ் கேபேஜ் ரூ.40 க்கும், ஐஸ்பர்க் ரூ.45 க்கும், ஸ்பிரிங் ஆனியன் ரூ.70 க்கும் விற்பனையாகி வருகிறது.

இதேபோல் மற்ற சைனீஸ் காய்கறிகளின் விலையும் அதிகரித்து வருகிறது” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *