
திருவனந்தபுரம்: “காங்கிரஸுக்குள் இருக்கும் பாஜகவின் ஸ்லீப்பர் செல்லில் இடம்பிடிக்க சசி தரூர் முயற்சி செய்கிறார்.” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் பினோய் விஸ்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “பயங்கரவாதத்துக்கு எதிரான ஒரு யுத்தத்தை பாஜக அரசியல் ஆதாய வேட்டையாக பயன்படுத்துகிறது. காங்கிரஸ் கட்சிக்குள் பாஜக ஸ்லீப்பிங் செல் இருப்பதாக ராகுல் காந்தி சொல்வது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. காங்கிரஸுக்குள் இருக்கும் பாஜகவின் ஸ்லீப்பர் செல்லில் இடம்பிடிக்க சசி தரூர் முயற்சி செய்கிறார்.பாஜகவுக்கு ஒவ்வொரு நகர்வையும் அரசியல் ஆதாயத்துக்காக எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துள்ளது.” எனப் பதிவிட்டுள்ளார்.