
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் தகித்து வந்த நிலையில், நேற்று திடீரென பெய்த சாரல் மழை காரணமாக மாநகரம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
மே 4ம் தேதி முதல் கத்திரி வெயிலும் தொடங்கியது. இதனால் சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் பதிவானது.