• May 18, 2025
  • NewsEditor
  • 0

நீலகிரியில் காடுகளை இழந்து தவிக்கும் வனவிலங்குகள் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் தஞ்சமடைந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக சிறுத்தை மற்றும் கரடிகளின் நடமாட்டம் குடியிருப்புப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகின்றன.

காவல் நிலையத்திற்குள் நுழைந்த சிறுத்தை

வளர்ப்பு நாய்களைத் தேடி இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளில் நுழையும் சிறுத்தைகள் நாள்தோறும் சி.சி.டி.வி கேமராக்களில் பதிவாகி வருகின்றன. இந்த நிலையில், ஊட்டி அருகில் உள்ள கொல்லிமலை பகுதியில் ஒருவரின் வீட்டிற்குள் இரவு நேரத்தில் நுழைந்த இரண்டு சிறுத்தைகள் நாய்கள் இருக்கிறதா? என இரைதேடிய சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதுகுறித்து வனத்துறையினர், ” நீலகிரி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சிறுத்தைகள் பல இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளில் நடமாடி வருகின்றன. குன்னூர், கோத்தகிரி, ஊட்டி ஆகிய பகுதிகளில் இருந்து சிறுத்தை நடமாட்டம் தொடர்பாக அதிக புகார்கள் வருகின்றன. இறைச்சிக் கழிகள் மற்றும் வளர்ப்பு நாய்களால் கவரப்பட்டு குடியிருப்புப் பகுதிகளுக்கு சிறுத்தைகள் வருகின்றன.

இரண்டு சிறுத்தைகள்

நாய் வளர்ப்பவர்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் கூண்டுகளை அமைத்து பராமரிக்க வேண்டும். குடியிருப்புப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருந்தால் வனத்துறையை அணுகலாம். இரவு நேரங்களில் வெளியே செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டால் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும். கோழி உள்ளிட்ட இறைச்சிக் கழிவுகளை, கண்ட இடங்களில் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ” என எச்சரிக்கின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *