• May 18, 2025
  • NewsEditor
  • 0

முகமூடி அணிந்த ஒரு​வன் சென்​னை​யில் தொடர் கொலைகளைச் செய்​கிறான். கொல்​லப்​பட்​ட​வர்​களின் அடை​யாளம் தெரியக்​கூ​டாது என்ற நோக்​கத்​துடன் உடல்​களை எரித்​து​விடு​கிறான். இந்த வழக்கை விசா​ரிக்​கும் துணை கமிஷனர் அரவிந்​தன் (நவீன் சந்​தி​ரா), ஒரு சிறிய ஆதா​ரத்​தைக் கொண்​டு, கொலை செய்​யப்​படு​பவர்​கள் யார்? அவர்​களுக்​கிடை​யில் இருக்​கும் தொடர்பு என்ன என்​ப​தைக் கண்​டு​பிடிக்​கிறார். அவரால் அந்த கொலை​யாளியை நெருங்க முடிந்​ததா என்​பது கதை.

புலன் விசா​ரணைப் படங்​களில், கொலை​யாளி வரித்​துக் கொண்​டிருக்​கும் உளவியல் காரணம், கொலை செய்​யப்​படு​கிறவர்​களுக்கு அவனுடன் இருக்​கும் தொடர்பு ஆகியன நம்​பக​மாக​வும் ஆழமாக​வும் இருந்​தால் தவிர, அதில் பார்​வை​யாளர்​களின் மனம் ஈடு​பாடு காட்​டாது. இந்த அடிப்​படை​யான தர்க்​கத்​தில் நேர்​மை​யான ஈடு​பாட்​டைக் காட்​டி​யிருப்​பதுடன், ‘இரட்​டையர்​’களைக் கொண்டு பிளாஷ் பேக் கதையை வடிவ​மைத்த வித​மும் அதைப் படமாக்​கிய வித​மும் அபாரம் என்று சொல்ல வைக்​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *