• May 18, 2025
  • NewsEditor
  • 0

அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முந்தினம் (மே 16), டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் (MD) விசாகன் ஐ.ஏ.எஸ் வீட்டுக்குள் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. அதோடு, மேலும் விசாரணைக்கு விசாகனனை தங்களுடைய அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

விசாகன் ஐ.ஏ.எஸ்- ஐ அழைத்துச் செல்லும் அமலாக்கத்துறை

அப்போதே, “டாஸ்மாக் MD வீட்டின் அருகே கிழிந்த நிலையில் டாஸ்மாக் நிறுவனம் தொடர்பாக முக்கிய விவரங்கள் குறித்த வாட்சப் Chat Screenshots கிடைத்ததாகவும், இவை துணை முதல்வர் உதயநிதியின் நண்பர் ரத்தீஷிடம் பேசியது எனவும் செய்திகள் வருகின்றன. உதயநிதியுடன் டாஸ்மாக் MD எடுத்த புகைப்படத்தை அவருக்கே அனுப்பும் அளவிற்கு அதிகாரம் படைத்தவரா இவர்?

டாஸ்மாக்கில் வாங்க வேண்டிய மதுபானங்கள் பட்டியலை அதன் MD-க்கு அனுப்பும் அளவிற்கு அதிகாரம் படைத்த இந்த ரத்தீஷ் தான் திமுகவின் புதிய Power Center-ஆ? இவர் துணை முதல்வருக்கு இணை முதல்வராக இருப்பதனாலோ என்னவோ, அனைத்து அதிகாரிகளும் பணிந்தார்களா? So, Sketch உதயநிதிக்கா? #யார்_இந்த_தியாகி?” என அ.தி.மு.க கேள்வியெழுப்பியது.

இவ்வாறிருக்க, வீட்டில் இரண்டாவது நாளாக நேற்றும் அமலாக்கத்துறை சோதனை தொடந்தது. இந்த நிலையில் அ.தி.மு.க தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “2-வது நாளாக தொடரும் ED ரெய்டுகள்! இன்னும் இந்த ரெய்டுகள் பற்றி முதல்வர் ஸ்டாலின் மவுனமாக இருப்பது ஏன்? தன் குடும்பத்தைச் சார்ந்தவர் வீட்டிலும், தனக்கு நெருக்கமானவர் வீட்டிலும் நடக்கும் இந்த ரெய்டு பற்றி ஏன் பேச மறுக்கிறார்?

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ரத்தீஷ் எங்கே இருக்கிறார்? துபாய் சென்றுவிட்டதாக வரும் செய்திகள் உண்மையா? அப்படியென்றால், ரெய்டு வருமோ என்ற அச்சத்தில் தலைமறைவானாரா ரத்தீஷ்? முதல்வராலும், அவரது மகனாலும் “தம்பி” என்று அன்போடு அழைக்கப்படும் ரத்தீஷின் “Job Description” என்ன? #யார்_அந்த_SIR என்று கேட்டோம் பதில் வரவில்லை. #யார்_அந்த_தியாகி என்று கேட்டோம்… தமிழ்நாட்டிற்கே தெரிந்த பதில் என்றாலும் ஸ்டாலின் வாய் திறக்கவில்லை.

இப்போது கேட்கிறோம் #யார்_அந்த_தம்பி? எப்படி வந்தது இந்த தம்பிக்கு இவ்வளவு அதிகாரம்? இந்த தம்பி கைதாகும் போது, தம்பியின் வசம் உள்ள தி.மு.க-வின் குடுமி சிக்கும்! அப்போது பேசித் தானே ஆக வேண்டும் ஸ்டாலின், உதயநிதி.” என்று பதிவிட்டிருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *