• May 17, 2025
  • NewsEditor
  • 0

மும்பை கிரிக்கெட் சங்கமானது (MCA), இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவின் பெயரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று ஸ்டேண்ட் திறந்துவைத்து அவரைப் பெருமைப்படுத்தியிருக்கிறது.

வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய ரோஹித் சர்மா, “இது நான் கனவிலும் நினைத்துப் பார்க்காதது.

வான்கடே போன்ற ஐகானிக் மைதானத்தில் விளையாட்டின் சிறந்த வீரர்கள், உலகின் தலைசிறந்த அரசியல் தலைவர்களிடையே எனது பெயர் இடம் பெற்றிருக்கிறது.

ரோஹித் ஸ்டேண்ட் – மும்பை வான்கடே ஸ்டேடியம்

இதற்காக, MCA உறுப்பினர்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன். நான் விளையாடிக்கொண்டிருக்கும்போதே எனக்கு மரியாதை அளிக்கப்படுவது ஸ்பெஷலாக இருக்கிறது.

என் அம்மா, அப்பா, என் சகோதரர், அவரின் மனைவி, என் மனைவி முன்னிலையில் இந்த கௌரவத்தைப் பெறுகிறேன்.” என்று எமோஷனலாக உரையாற்றினார்.

ரோஹித்துக்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்த மரியாதையைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஃபினிஷர் டு ஓப்பனர் டு கேப்டன்

அந்த வரிசையில் இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், “கிரிக்கெட் மைதானத்தில் நம்பமுடியாத சாதனைகளைப் படைத்ததற்கு வாழ்த்துகள் ரோஹித்.

ஃபினிஷர் டு ஓப்பனர் டு கேப்டன் என அனைத்திலும் உத்வேகம் அளிக்கக்கூடியவராக இருந்திருக்கிறீர்கள்.

அணியை முன்னின்று வழிநடத்தும், போட்டியைச் சிறப்பாக மாற்றும் தலைவர் மிக அரிது. நீங்கள் அதுபோன்ற தலைவர்.

நீங்கள் போட்டியை மட்டுமல்ல, போட்டியின் அணுகுமுறை, டிரெஸ்ஸிங் ரூம் சூழல், அணி மற்றும் கேப்டனுக்கான ரோல் ஆகியவற்றை மறுவரையறை செய்திருக்கிறீர்.

நான் முன்பு சொன்னதுபோல, நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும். நீங்கள் இதற்குத் தகுதியானவர். வான்கடே இப்போது மேலும் ஐகான் ஆகிவிட்டது.” என்று எக்ஸ் தளத்தில் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *