
சென்னை: தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் தொடங்கியது. சென்னையில் இருந்து புறப்பட்ட முதல் விமானத்தில் 402 பேர் புறப்பட்டனர். தமிழகத்திலிருந்து நடப்பாண்டு 5,730 பேர் ஹஜ் புனித பயணம் மேற்கொள்கின்றனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக 5,407 பேரும், மீதமுள்ள 323 பேர் பல்வேறு மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில் இருந்தும் பயணம் மேற்கொள்கின்றனர்.
ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் 402 பேர் அடங்கிய முதல் குழுவினர் நேற்று சென்னை விமான நிலையத்திலிருந்து சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் தனி விமானத்தில் ஜெட்டாவுக்கு புறப்பட்டனர். அவர்களை சென்னை விமான நிலையத்தில் சிறுபான்மையர் நலன் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழி அனுப்பி வைத்தார்.