
சென்னை: “கோடைக்கால மின் தேவை, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவாக உள்ளது. இதனால், இந்த ஆண்டு கோடை மின் தேவையை எளிதாக பூர்த்தி செய்ய முடியும்” என தமிழக மின்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
சென்னை, அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இயங்கி வரும் மின்நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தை, மின்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் இன்று ஆய்வு செய்தார். அப்போது, தற்போது நிலவி வரும் கடும் கோடை வெப்பம், பல்வேறு மாவட்டங்களில் கடும் சூறாவளி காற்று மற்றும் கனமழை காரணமாக மின்னகத்தில் பதிவான மின்சாரம் தொடர்பான பொதுமக்களின் புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தது ஆய்வு மேற்கொண்டார்.