• May 17, 2025
  • NewsEditor
  • 0

ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டத்தில் உள்ள பராலகேமுண்டி என்ற இடத்தைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவர் கடந்த ஏப்ரல் 29ம் தேதி திடீரென இறந்துபோனார்.

அவரது உடல் உறவினர்கள் முன்னிலையில் புபனேஷ்வரில் தகனம் செய்யப்பட்டது. ராஜலட்சுமி மாரடைப்பு காரணமாக இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜலட்சுமியின் சகோதரர் பிரசாத் ராஜலட்சுமியின் வளர்ப்பு மகளின் போனை புபனேஷ்வர் வீட்டில் கண்டுபிடித்தார். அந்த போனை பிரசாத் போலீஸாரிடம் கொடுத்தார்.

போலீஸார் அதனைச் சோதனை செய்து பார்த்தபோது இன்ஸ்டாகிராம் சாட்டிங் விபரங்களை ஆய்வு செய்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன.

அதில் ராஜலட்சுமியின் 13 வயது வளர்ப்பு மகள் தனது தாயாரைக் கொலை செய்யத் தனது ஆண் நண்பர்களுடன் இன்ஸ்டாகிராமில் சாட்டிங் செய்தது தெரிய வந்தது.

கொலை

இதையடுத்து போலீஸார் மேற்கொண்டு விசாரித்ததில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. ராஜலட்சுமி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புபனேஷ்வர் தெருவில் கிடந்த பெண் குழந்தை ஒன்றை எடுத்து வளர்த்து வந்தார்.

ராஜலட்சுமி தம்பதிக்குக் குழந்தை இல்லை. அக்குழந்தையைத் தங்களது சொந்த குழந்தையாக வளர்த்து வந்தனர். அக்குழந்தைக்கு 13 வயதாகிவிட்ட நிலையில் அவருக்கு கணேஷ் (21), தினேஷ்(20) ஆகிய இரண்டு பேருடன் தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த ராஜலட்சுமி தொடர்பைத் துண்டிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. தினேஷும், கணேஷும் சேர்ந்து ராஜலட்சுமி பெயரில் இருக்கும் சொத்தை அடையத் திட்டம் தீட்டினர்.

இதையடுத்து 13 வயது மைனர் பெண்ணிடம் இருவரும் பேசி ராஜலட்சுமியைக் கொலை செய்யத் திட்டமிட்டனர். இதற்காக 13 வயது பெண் இரவில் தனது தாயாருக்குச் சாப்பாட்டோடு சேர்த்து மயக்க மருந்தையும் கலந்து கொடுத்தார்.

அதனைச் சாப்பிட்டு ராஜலட்சுமி மயக்கம் அடைந்தவுடன் தனது ஆண் நண்பர்கள் இரண்டு பேரையும் வீட்டிற்கு வரவழைத்து தலையணையால் முகத்தில் அமுக்கிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

ராஜலட்சுமி தனது மகள் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். கேந்திரீய வித்யாலயா பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக பராலகேமுண்டி என்ற இடத்தில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி இருந்தார்.

ராஜலட்சுமியைக் கொலை செய்தது தொடர்பாக போலீஸார் மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். போலீஸாரின் விசாரணையில் கணேஷ்தான், 13 வயது பெண்ணிடம் ராஜலட்சுமியைக் கொலை செய்துவிட்டால் நாம் எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் நமது நட்பைத் தொடர முடியும் என்று கூறி கொலை செய்யத் தூண்டி இருக்கிறார்.

கொலை செய்யப்பட்ட ராஜலட்சுமி
கொலை செய்யப்பட்ட ராஜலட்சுமி

இதைத் தொடர்ந்து மூன்று பேரும் சேர்ந்து கொலை செய்தனர். காலையில் 13 வயது பெண் தனது தாயார் மயங்கி இருப்பதாகக் கூறி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.

அங்கு டாக்டர்கள் அவரைச் சோதித்தபோது இறந்திருந்தார். தனது தாயாருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக 13 வயது பெண் தெரிவித்தார். ராஜலட்சுமிக்கு ஏற்கனவே இருதய பிரச்னை இருந்தது.

இதனால் அவர் சொன்னதில் உறவினர்களுக்கு எந்த வித சந்தேகமும் வரவில்லை. 13 வயது பெண் தனது தாயாரின் தங்க ஆபரணங்களை எடுத்து கணேஷிடம் கொடுத்ததும் தெரிய வந்துள்ளது.

கணேஷிடமிருந்து 30 கிராம் தங்கம், 3 மொபைல் போன் மற்றும் கொலை செய்யப் பயன்படுத்திய இரண்டு தலையணைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இக்கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீஸார் மூன்று பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *