
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் தக்க பதிலடியை கொடுத்துள்ளது இந்தியா.
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் நடந்தப் பின், பெரும்பாலான உலக நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவாக நின்றது. தீவிரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டை உறுதியாக எடுத்துரைத்தது.
இந்த நிலையில், தற்போது மத்திய அரசு, ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்தியாவின் முக்கிய கூட்டாளி நாடுகளுக்கு அனுப்பி ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து விளக்க உள்ளது. இதில் ஐக்கிய தேசிய பாதுகாப்பு கவுன்சிலும் அடங்கும்.
யார் யார் செல்கிறார்கள்?
நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றதும் பாஜகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் இந்தத் திட்டத்திற்கு அனுப்பப்போவதில்லை. இதில் அனைத்து கட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
அதன் படி, இந்தத் திட்டத்தில் மூலம் கூட்டாளி நாடுகளுக்கு செல்லப்போகும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…
1. சசி தரூர், காங்கிரஸ்
2. ரவி சங்கர் பிரசாத், பாஜக
3. சஞ்சய் குமார் ஜா, ஜனதா தளம்
4. பைஜயந்த் பாண்டா, பாஜக
5. கனிமொழி கருணாநிதி, திமுக
6. சுப்ரியா சுலே, தேசியவாத காங்கிரஸ்
7. ஶ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே, சிவ சேனா
இந்தக் குழுவிற்கு சசி தரூர் தலைமை தாங்க உள்ளார்.
எப்போது செல்வார்கள்?
இவர்கள் இந்த மாத இறுதியில் குறிப்பிட்ட நாடுகளுக்கு செல்ல இருக்கிறார்கள். இது கிட்டதட்ட 10 நாள் பயணமாக இருக்கும்.
என்ன செய்வார்கள்?
இவர்கள் இந்தியாவின் முக்கிய கூட்டாளி நாடுகளுக்கு சென்று இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து விளக்குவார்கள். மேலும், தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை அவர்கள் அந்த நாடுகளில் எடுத்துரைப்பார்கள்.