
பாலிவுட் நடிகர் ஆமீர் கான் சிதாரே ஜமீன் பர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது.
இதற்கான வேலையில் ஆமீர் கான் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மத்திய அரசு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது.
இத்தாக்குதலை பாலிவுட் பிரபலங்கள், அரசியல்வாதிகள் என அனைத்து தரப்பினரும் பாராட்டி இருந்தனர். ஆனால் ஆமீர் கான் மத்திய அரசின் இந்த நடவடிக்கையைப் பாராட்டி கருத்து தெரிவிக்கத் தாமதம் செய்வதாக நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டினர்.
இதையடுத்து ஆமீர் கானின் படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் ஆன்லைனில் கோரிக்கை விடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
இதையடுத்து கடந்த 12ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆப்ரேசன் சிந்தூரை நிகழ்த்திய ராணுவத்தினரையும், பிரதமர் நரேந்திர மோடியையும் பாராட்டி ஆமீர் கான் பதிவிட்டு இருந்தார்.
ஆமீர் கான் தாமதமாக ஆப்ரேசன் சிந்தூர் குறித்து கருத்து தெரிவித்து இருப்பதாக நெட்டிசன்கள் விமர்னம் செய்து இருந்தனர்.
சிதாரே ஜமீன் பர் படம் வெளியாக இருப்பதால் அதனை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் இப்பதிவை வெளியிட்டு இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்திருந்தனர்.
இதனால் ஆமீர் கான் அதிர்ச்சியடைந்துள்ளார். ஏற்கனவே கடைசியாக வெளியான ஆமீர் கானின் லால் சிங் சத்தா படத்தையும் நெட்டிசன்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், அவசரமாக ஆமீர் கான் தனது படத்தயாரிப்பு கம்பெனியின் லோகோவை மாற்றி இருக்கிறார்.

படத்தயாரிப்பு கம்பெனியின் சமூக வலைத்தள பக்கத்தில் கம்பெனியின் லோகோவை அகற்றிவிட்டு அந்த இடத்தில் மூவர்ணக் கொடியைப் பகிர்ந்துள்ளார்.
அதோடு மூவர்ணக் கொடியைப் பகிர்ந்த பிறகு அதன் ஸ்கிரீன் ஷார்ட்டை எடுத்து சமூக வலைத்தள பக்கத்தில் ஆமீர் கான் பகிர்ந்துள்ளார்.
பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் இந்த மாற்றத்தைச் செய்து இருக்கிறார்.
இதனைப் பார்த்ததும் படத்தைப் புறக்கணிக்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டதால்தான் ஆமீர் கான் இந்த மாற்றத்தைச் செய்து இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். ஆமீர் கானுக்கு ஆதரவாகவும் கருத்துகள் வருகின்றன.
வரும் ஜூன் 20ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…