
சென்னை: தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவேர்களாக்கும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், திட்டப் பயனாளிகள் அடையாளம் காணப்பட்டது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூய்மை பணியாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கான அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதேபோல, துாய்மை பணியாளர்களுக்கு 50 சதவீத மானியத்துடன், நவீன கழிவுநீர் அகற்றும் ஊர்திகள், உபகரணங்கள் வழங்கும் வகையில் நமஸ்தே திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.