
புதுடெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதல் குறித்து முக்கிய வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு விளக்கமளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் திமுக எம்.பி கனிமொழி, காங்கிரஸ் எம்.பி சசி தரூர் உட்பட 7 பேர் இடம்பெற்றுள்ளனர்.
சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் மோதல் மற்றும் அது குறித்த இந்தியாவின் நிலைப்பாடு குறித்து முக்கிய வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு விளக்கமளிக்கும் பணியில் ஈடுபடவுள்ள அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் குழுவிற்கு தலைமை தாங்கும் ஏழு எம்.பிக்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் காங்கிரஸ் எம்.பி சசி தரூர், திமுக எம்.பி கனிமொழி, என்சிபி எம்.பி சுப்ரியா சுலே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.