
சென்னை: பிரச்சினைகளுக்கு துணை நின்று மக்களின் நம்பிக்கையை பெறுங்கள் என தவெக மாவட்ட செயலாளர்களுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தலைமை தாங்கினார். கட்சி வளர்ச்சிப் பணிகள், பூத் கமிட்டி மாநாடு தொடர்பாக நிர்வாகிகளுக்கு ஆனந்த் ஆலோசனை வழங்கினார். மேலும், ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிகளிலும் தவெகவுக்கு இருக்கும் வெற்றி வாய்ப்பு நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.