
பூஜ்: 'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கை நிறைவடையவில்லை. தற்காலிகமாகவே நிறுத்தி வைத்திருக்கிறோம். பாகிஸ்தானின் செயல்பாடுகளை பொறுத்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 7-ம் தேதி பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே 4 நாட்கள் அதிதீவிர போர் நடைபெற்றது. பாகிஸ்தானின் வேண்டுகோளை ஏற்று கடந்த 10-ம் தேதி சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது.