
திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு கொல்கத்தாவை சேர்ந்த சஞ்சீவ் கோயங்கா எனும் பக்தர் 5.267 கிலோ எடையில் 2 தங்க ஹஸ்தங்களை (கைகள்) நேற்று காணிக்கையாக வழங்கினார்.
ரூ.3.63 கோடி மதிப்புடைய இந்த தங்க ஹஸ்தங்களை திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கய்ய சவுத்ரி பெற்றுக்கொண்டார். முன்னதாக ஏழுமலையானை சஞ்சீவ் கோயங்கா தரிசனம் செய்தார். அவருக்கு ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.