• May 16, 2025
  • NewsEditor
  • 0

விராட் கோலியின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இணையதில் வைரலாகி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிபிஎஸ்இ வாரியம், பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகளை வெளியிட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள் வெளியான நிலையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kohli

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜித்தின் யாதவ் இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 2023 ஆகஸ்ட் மாதம் பதிவிட்டது, தற்போது பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள் வெளியான நிலையில் கோலியின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட்டைப் போலவே படிப்பிலும் விராட் கோலி சிறந்தவராக இருந்துள்ளார்.

விராட் கோலியின் சிபிஎஸ்சி 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் சமூக அறிவியல், கணிதம், அறிவியல் மற்றும் ஐடி போன்றவற்றின் மதிப்புகள் இடம்பெற்றுள்ளன. அவர் ஆங்கிலத்தில் A1 கிரேடு மற்றும் சமூக அறிவியலில் A2 கிரேடு, இந்தியில் B1 பெற்றுள்ளார்.

அறிவியல் மற்றும் அறிமுக தகவல் தொழில்நுட்பத்தில், C1 மற்றும் C2 பெற்றுள்ளார். விராட் கோலியின் அதிகபட்ச மதிப்பெண்கள் ஆங்கில மற்றும் சமூக அறிவியலில் வந்துள்ளன.

இந்த மதிப்பெண் சான்றிதழின் கீழ் விராட் கோலி ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த மதிப்பெண் சான்றிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் ஜாம்பவானாக இருந்த விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். ஏற்கனவே டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள இவர் இனி ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாட உள்ளேன் என்று தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *