• May 16, 2025
  • NewsEditor
  • 0

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மகன் ஜூனியர் ட்ரம்ப் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவர் ட்ரம்ப் பெயரில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்து வருகிறார். இதற்காக உலகம் முழுவதும் உள்ள பிரபல கட்டுமான நிறுவனத்துடன் ஜூனியர் ட்ரம்ப் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்.

மும்பை மற்றும் புனேயில் ஏற்கனவே ட்ரம்ப் டவர் கட்டப்பட்டுள்ளது. மும்பையை தொடர்ந்து டெல்லி குருகிராம் பகுதியில் ட்ரம்ப் டவர் கட்டப்பட்டு வருகிறது. குருகிராமில் உள்ள 69வது செக்டரில் கட்டப்படும் இந்த டவரை ஸ்மார்ட் வேல்டு டெவலப்பர்ஸ் நிறுவனமும், திரிபேகா நிறுவனமும் சேர்ந்து கட்டி வருகிறது.

இந்த டவர் மொத்தம் 51 மாடிகளை கொண்டதாக கட்டப்படுகிறது. 3 மற்றும் 4 படுக்கை கொண்ட வீடுகளாக 3,100 சதுர அடி முதல் 5,000 சதுர அடி கொண்ட பிளாட்களாக கட்டப்பட்டு வருகிறது.

8 முதல் 15 கோடி ரூபாய்!

இந்த டவரில் மொத்தம் 298 பிளாட்கள் இருக்கிறது. ஒவ்வொரு வீடும் 8 முதல் 15 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் சில வீடுகள் 125 கோடி கொண்டதாகும். ஒவ்வொரு பிளாட்டிலும் தரை டைல்ஸ், ஜன்னல் கண்ணாடி, சீலிங் போன்றவை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை கொண்டு நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

அருகில் உள்ள ஆரவல்லி மலையை பார்க்கும் வகையில் மிகவும் வசதியான பால்கனி, சில வீடுகளுக்கு தனியாக லிப்ட் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு தனித்தனியாக நீச்சல் குளம் கட்டப்பட்டு வருகிறது. உடற்பயிற்சி மையம், தியானம், யோகா மையம், ஸ்பா போன்றவையும் கட்டப்பட்டுள்ளது.

பிரத்யேக கார்டன், நடைபயிற்சி தளம் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. இது தவிர கடல்வாழ் உயிரினங்கள் அடங்கிய அக்குவாரியம் பாருடன் கூடிய ரெஸ்டாரண்ட் அமைக்கப்படுகிறது. பார்ட்டி மற்றும் நிகழ்ச்சிகளுக்கு மாடியில் திறந்த வெளி ஹால் வசதி, குழந்தைகள் விளையாட சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.

அழைத்தவுடன் வரக்கூடிய சமையல் நிபுணர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த டவரில் வீடு விற்பனை தொடங்கியவுடன் வீடுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன. அதுவும் வீடு விற்பனை தொடங்கிய நாளிலேயே அனைத்து வீடுகளும் விற்றுத்தீர்ந்துவிட்டது. டெல்லி விமான நிலையம், தேசிய நெடுஞ்சாலை-48, துவாரகா எக்ஸ்பிரஸ் போன்றவற்றை எளிதில் அடையும் வகையில் இந்த டவர் கட்டப்பட்டு வருகிறது.

இந்த டவர் மொத்தம் ரூ.3250 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே 2018ம் ஆண்டும் குருகிராமில் ஒரு ட்ரம்ப் டவர் கட்டப்பட்டுள்ளது. இதில் ஜூனியர் ட்ரம்ப் முதலீடு எதுவும் செய்யமாட்டார். தனது பிராண்டை மட்டும் பயன்படுத்த அனுமதி கொடுத்து குறிப்பிட்ட தொகையை வாங்கிக்கொள்வார். இப்போது டொனால்டு ட்ரம்ப் அதிபராகி இருப்பதால் ட்ரம்ப் டவருக்கு அதிக வரவேற்பு இருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *