
பெங்களூரு: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதிகளை ஒழிக்கவும், எதிர்காலத்தில் பாகிஸ்தான் அவர்களுக்கு ஆதரவளிக்காமல் இருக்கவும் இந்தியா இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் கோப்பல் மாவட்டத்தில் உள்ள கினிகேரா விமானப்படை தளத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சித்தராமையா, "காஷ்மீரில் 26 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளுக்கு உதவுவதும் அடைக்கலம் கொடுப்பதும் பாகிஸ்தான்தான். என்னைப் பொறுத்தவரை, நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது, அதைப் பயன்படுத்திக் கொண்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக இன்னும் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மேலும், பாகிஸ்தான் மீண்டும் பயங்கரவாதிகளுக்கு உதவாமல், ஒத்துழைக்காமல் இருப்பதை உறுதி செய்திருக்க வேண்டும், பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டிருக்க வேண்டும்.