• May 16, 2025
  • NewsEditor
  • 0

‘என் தந்தை (ட்ரம்ப்) கொல்லப்பட வேண்டும் என்று சொல்கிறார்’ என்று அமெரிக்க பெடரல் வங்கியின் முன்னாள் இயக்குநர் ஜேம்ஸ் காமி மீது குற்றம்சாட்டியுள்ளார், ட்ரம்பின் மகன் ட்ரம்ப் ஜூனியர்.

மேலே கூறியிருப்பதுப்போல, ஜேம்ஸ் காமி பெடரல் வங்கியின் முன்னாள் இயக்குநர் ஆவார். ட்ரம்பின் 2017 டு 2021 அதிபர் ஆட்சியின் போது, ஜேம்ஸ் காமியை அந்தப் பதவியில் இருந்து நீக்கியிருந்தார்.

தற்போது மீண்டும் ட்ரம்ப் அதிபராக பதவியேற்றுள்ளார்.

ஜேம்ஸ் காமியின் பதிவு

இந்த நிலையில், ஜேம்ஸ் காமி தனது சமூக வலைதள பக்கத்தில், “எனது பீச் நடைபயணத்தின் போது ‘கூல்’ ஆன ஒரு சிப்பி உருவாக்கம்” என்ற கேப்ஷனோடு, கடல் சிப்பிகளால் உருவாக்கிய ’86 47′ என்கிற எண்ணின் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.

ஆனால், அந்தப் பதிவையே தற்போது காமி நீக்கிவிட்டார்.

இருந்தும், அந்தப் பதிவின் ஸ்கிரீன்ஷாட் தீயாக பரவ தொடங்கியுள்ளது.

இந்தப் போட்டோவை பதிவு செய்து ட்ரம்பின் மகனான ட்ரம்ப் ஜூனியர், “என்னுடைய தந்தை கொல்லப்பட வேண்டும் என்று ஜேம்ஸ் காமி பதிவிட்டிருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

இது உண்மையா… பொய்யா என்று தெரியவில்லை. அமெரிக்கா பாதுகாப்புத் துறையும் இது உண்மை என்று உறுதிசெய்யவில்லை.

ஆனால், ஏன் இது பதிவு இப்படி உருமாறி இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

மெரியம்-வெப்ஸ்டர் என்கிற அகராதியின் படி, 86 என்றால் தூக்கிய எறியப்பட வேண்டும் என்று பொருள்.

47 என்பது ட்ரம்ப் அமெரிக்காவின் 47-வது அதிபர் ஆவார். அதனால், இது அவரைக் குறிக்கிறது என்று பொருள் கொள்ளப்படுகிறது.

ஆனால், ஜேம்ஸ் காமி இதை உண்மையில் எதனால் பதிவிட்டார் என்பது இதுவரை தெரியவில்லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *