
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `சின்ன மருமகள்’. இந்தத் தொடரில் மோகனா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் கெளரி ஜானு. இவரை நம் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம்.
“2003 இல் என் மீடியா பயணம் ஆரம்பிச்சது. முதலில் ஆங்கராகத்தான் என் கரியரை ஆரம்பிச்சேன். அடுத்து பட்டிமன்றம், நிகழ்ச்சித் தொகுப்பாளர்னு ஒவ்வொன்னும் பண்ணிட்டிருந்தேன்.
அந்த சமயம் தான் விஜய் டிவியில் சீரியல் வாய்ப்பு கிடைச்சது. தமிழில் எல்லா சேனலிலும் நான் சீரியல் பண்ணிட்டேன். இப்ப அதிகமான வரவேற்பு எனக்கு `சின்ன மருமகள்’ சீரியலுக்காக கிடைச்சிட்டிருக்கு.
எனக்கு அந்தக் கதாபாத்திரம் கிடைச்சதுக்கு கடவுளுக்கு நன்றி சொல்லிக்கிறேன்!” என்றவரின் முகத்தில் அத்தனை பெருமிதம்!
“முதலில் இந்த சீரியலுக்காக டெஸ்ட் ஷூட் போயிருந்தப்ப எனக்குக் கொடுத்த கதாபாத்திரம் வேற. பிறகு இந்தக் கதாபாத்திரத்திற்குப் பதில் வேற கதாபாத்திரம்னு மாத்தினாங்க.
டைரக்டர் எனக்கு மோகனா கதாபாத்திரம் கொடுத்தார். என் கதாபாத்திரம் மாறினதுல எனக்கு வருத்தமே இல்ல. ஏன்னா இந்த கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. மக்களும் என்னை மோகனாவாக ஏத்துக்கிட்டாங்க!” என்றவர் தொடர்ந்து பேசினார்.

“எனக்கும் சின்ன வயசிலேயே திருமணம் நடந்திடுச்சு. `சின்ன மருமகள்’ கதை கேட்டப்ப மனசுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. நம்ம வாழ்க்கையைக் கதையா எடுத்த மாதிரிதான் இருந்தது.
ஃபேமிலியில் எனக்கு கரியர் சார்ந்து எந்தவொரு தடங்கலும் இல்ல. நான் ஃபர்ஸ்ட் டைம் ஆங்கரிங் பண்ணப்ப அம்மாவுக்குப் பயங்கர கோபம்.
வெளியில தெரிய வரவும் சரி ஏதோ பண்றான்னு விட்டுட்டாங்க. ஆனா, யாருமே இன்னைக்கு நான் இப்படியொரு இடத்துக்கு வருவேன்னு எதிர்பார்க்கல. அதே மாதிரி என் பசங்களும் எனக்கு மிகப்பெரிய சப்போர்ட்.
இப்ப 6,7 படங்கள் முடிஞ்சிருக்கு. படம், சினிமா ரெண்டும் எனக்கு ரெண்டு கண் மாதிரி. நடிப்புதான் என்னோட உயிர். அதைத்தாண்டி எனக்குன்னு எதுவுமே இல்ல. கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் நடிக்கணும் அவ்ளோ தான்!” என்றவரிடம் `பாடி ஷேமிங்’ குறித்துக் கேட்டோம்.

“என்ன கதாபாத்திரமோ அதுக்கு பேசுங்க. அம்மா கேரக்டருக்கு ஒல்லியான ஆர்ட்டிஸ்ட் தான் வேணும். நயன்தாரா மாதிரி அம்மா கேரக்டருக்கு வேணும்னா வீட்ல இருக்கிற அம்மாக்கள் எல்லாம் என்னன்னு சொல்லுவீங்க. அம்மா கேரக்டர் அம்மா மாதிரி இருக்கட்டுமே?
அம்மா கேரக்டருக்கு ஏன் ஹீரோயின் மாதிரி கேட்குறீங்க? எப்ப பாரு பாடி ஷேமிங், பாடி ஷேமிங். ஒவ்வொருத்தர் உடலுக்குப் பின்னாடி என்னென்ன விஷயங்கள் இருக்குன்னு அவங்க அவங்களுக்குத்தான் தெரியும். நம்ம சமூகத்தில் இந்தவொரு விஷயம் கண்டிப்பா மாறணும்!” என்றவர் கன்டின்யூ பண்ணினார்.
“எனக்கு மோகனா கேரக்டர் பார்க்கிறப்ப சின்ன வயசு ஜானுவைப் பார்க்கிற மாதிரி தோணும். ஓ.ஏ.கே. சுந்தர் சார் தான் இந்த சீரியலில் எனக்கு ஜோடி. அவர் செட்ல என்னைப் பார்த்துட்டு இவங்க எப்படி இந்தக் கேரக்டர் பண்ணப் போறாங்கன்னு யோசிச்சிருக்கார்.
அந்த அளவுக்கு செட்ல பேசிட்டிருப்பேன். முதலில் அவரைப் பார்த்தாலே பயமா இருந்துச்சு. ஏன்னா பெரிய ஆர்ட்டிஸ்ட் அதுமட்டுமில்லாம அவர் அப்பா காலத்துல இருந்து இன்டஸ்ட்ரியில் இருக்காங்க.
அவருக்கு ஜோடியா நடிக்கும்போது மரியாதை கலந்த பயம் இருந்தது. அவர் ரொம்ப நல்ல மனுஷன். அவர் அந்த கம்பர்டபுள் எனக்குக் கொடுத்தார்.
ஒருமுறை அவருடைய மனைவியைச் சந்திச்சப்ப, `அவருக்கு ஜோடியா வரப் போறவங்க எப்படி இருப்பாங்கன்னு யோசிச்சேன். உங்களுக்கு அந்தக் கேரக்டர் பொறுத்தமா இருக்கு. ஸ்கிரீன்ல உங்க ஜோடி நல்லா இருக்கு’னு சொன்னாங்க!” என்றார்.

கெளரி ஜானு இன்னும் பல விஷயங்கள் குறித்து நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…