
சிம்லா: கடந்த இரண்டரை ஆண்டுகளில் இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தம் 1,200 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் ரோஹித் தாக்கூர் தெரிவித்தார்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள இமாச்சலப் பிரதேச கல்வி அமைச்சர் ரோஹித் தாக்கூர், “கடந்த இரண்டரை ஆண்டுகளில் மூடப்பட்ட 1,200 பள்ளிகளில் 450 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பூஜ்ஜியமாக இருந்ததால் மூடப்பட்டன. மற்றவை குறைந்த மாணவர் சேர்க்கை காரணமாக இணைக்கப்பட்டன. மாநில அரசின் கல்வித் துறையை வலுப்படுத்த பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் பள்ளிகளை இணைப்பது மற்றும் மறுசீரமைப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.