
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’.
இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை வைத்து இயக்கியிருந்த ‘விலங்கு’ வெப்சீரிஸ் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.
இதன்பின் பிரசாந்த் பாண்டியராஜ் – சூரியை வைத்து ‘மாமன்’ படத்தை இயக்கி இருக்கிறார். ஐஸ்வர்யா லக்ஷ்மி நாயகியாக நடித்திருக்கிறார். தவிர, ராஜ்கிராண், சுவாசிகா, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். தாய்மாமனின் கதையாக உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி குடும்பங்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.
இந்நிலையில் இத்திரைப்படம் இன்று (மே 16) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. படத்தைப் பார்க்க சூரி திரையரங்கிற்கு சென்றிருக்கிறார்.
அப்போது செய்தியாளர்கள் சூரியிடம் மக்களின் வரவேற்பு குறித்து கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
அதற்கு பதிலளித்த சூரி, “ படத்தைப் பார்த்த மக்கள் ரொம்ப நன்றாக இருக்கிறது என்று சொன்னனர்கள். நிறையப் பேர் அழுதார்கள். படம் முடிந்து எல்லாரும் கைத்தட்டினால் அதுதான் படத்திற்கான மரியாதை என்று நினைக்கிறேன்.

அந்தவகையில் ‘மாமன்’ படத்தைப் பார்த்த மக்கள் கைத்தட்டினார்கள். பெண்கள் ஒவ்வொருத்தரும் அவர்களை கனெக்ட் செய்துகொண்டார்கள்.
எதற்காக இந்தப் படத்தை இயக்குநர் எடுத்தாரோ அது சேர வேண்டியவர்களுக்கு சரியாக சென்று சேர்ந்துவிட்டது.
இன்னும் எல்லா உறவுகளும், குடும்பங்களும் இந்தப் படத்தைக் கொண்டாடுவார்கள் என்று நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…