
யூடியூபில் திரைப்படங்களை விமர்சனம் செய்து அதன் மூலம் ஆதரவாளர்களையும், அதே அளவு ஹேட்டர்களையும் ஈட்டி வைத்திருப்பவர் கிஸா 47 (சந்தானம்). திரை விமர்சகர்களை குறிவைத்து தன்னுடைய பாழடைந்த தியேட்டருக்கு வரவழைத்து கொல்லும் பேய் ஹிட்ச்காக் இருதயராஜ் (செல்வராகவன்) ஹீரோ கிஸாவை தனது திரையரங்குக்கு வரவழைக்கிறார். ஆனால் அவருக்கு முன்பாகவே ஹீரோவின் குடும்பத்தினர் (நிழல்கள் ரவி, கஸ்தூரி, யாஷிகா ஆனந்த்) அங்கு சென்று மாட்டிக் கொள்கின்றனர்.
ஹீரோவும் அவரது நண்பரும் (மொட்டை ராஜேந்திரன்) திரைக்குள் இழுக்கப்பட்டு அதில் ஓடும் திரைப்படத்துக்குள் சென்று பார்க்கும்போதுதான் தெரிகிறது, அதில் இருக்கும் நடிகர்களாக ஹீரோவின் குடும்பத்தினர் இருப்பது. திரைக்குள் ஹீரோவின் காதலி (கீதிகா திவாரி) பேயாக மாறி இருக்கிறார். அவர் ஏன் பேயாக மாறினார்? திரைக்குள் இருந்து தனது குடும்பத்தை ஹீரோ எப்படி வெளியே கொண்டு வந்தார் என்பதே ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் மீதிக் கதை.