• May 16, 2025
  • NewsEditor
  • 0

சௌத் இந்தியன் வங்கி, நிதியாண்டு 24-25 ல் ரூ.1302.88 கோடி என்ற நிகர இலாபத்தை அறிவித்திருக்கிறது. நிதியாண்டு 23-24-ல் ரூ.1070.08 கோடி இலாபத்துடன் ஒப்பிடுகையில், 21.75 சதவிகித வளர்ச்சியை இவ்வங்கி பதிவு செய்திருக்கிறது.

வங்கி செயல்பாட்டின் முடிவுகளை அறிவிக்கும்போது கீழ்குறிப்பிடப்பட்ட பகுதிகளில் இதுவரை இல்லாத மிக உயர்வான செயல்திறனை வங்கி எட்டி சாதனை படைத்திருக்கிறது என்று அதன் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயலாக்க அதிகாரி சேஷாத்ரி கூறினார்.

இவ்வங்கியின் வரலாற்றில் மிக உயர்ந்த அளவாக இயக்க ரீதியிலான வர்த்தகத்தின் மதிப்பு ரூ. 1.95,104,12 கோடியாக பதிவாகியிருக்கிறது.

இவ்வங்கியின் வரலாற்றில் மிக உயர்ந்த அளவாக ரூ. 1,30288 கோடி நிகர இலாபம் எட்டப்பட்டிருக்கிறது.

சௌத் இந்தியன் பேங்க்

இவ்வங்கியின் வரலாற்றில் மிக உயர்ந்த அளவாக இயக்க இலாபமானது ரூ. 2,270,08 கோடியாகப் பதிவாகியிருக்கிறது.

இவ்வங்கியின் வரலாற்றில் மிக உயர்ந்த அளவாக ரூ.1,913,43 கோடி பிற ஆதாரங்களிலிருந்து கிடைக்கும் வருவாயாக இருக்கிறது.

இவ்வங்கியின் வரலாற்றில் மிக உயர்ந்த அளவாக ரூ 3.485.64 கோடி நிகர வட்டி வருவாய் கிடைத்திருக்கிறது.

வாரா ஐயக் கடன்களுக்கான நிதி ஒதுக்கீட்டு விகிதம் (தள்ளுபடி செய்த கடன்கள் உட்பட) 85.03% என்ற அளவில் இருக்கிறது.

சொத்துக்கள் மீதான இலாபம் கடந்த 20 ஆண்டுகளில், மிகவும் உயர்ந்து 1.05% என பதிவாகியிருக்கிறது.

கடந்த 11 ஆண்டுகளில் மிக உயர்ந்த அளவாக பங்குகள் மீதான இலாபம் 12 90% ஆக இருக்கிறது.

நிகர வாராக் கடன்கள் 1% க்கும் குறைவாக பதிவாகியிருக்கிறது.

முக்கிய சிறப்பம்சங்கள்

இந்தி நிதியாண்டில், இயக்க ரீதியிலான இலாபம் 2155% அளவிற்கு உயர்ந்திருக்கிறது; நிதியாண்டு 24-ல், ரூ.1,867.67 கோடியாக இருந்த இது, FY 25 ல் ரூ 2270.08 கோடியாக அதிகரித்திருக்கிறது.

மொத்த வாராக் கடன்கள் விகிதம், ஆண்டு அடிப்படையில் 450% லிருந்து 130 bps குறைந்து 320% ஆக பதினகியிருக்கிறது.

NNPA ஆண்டு அடிப்படையில் 146% விருந்து 54 bps குறைத்து 0.92% ஆக பதிவாகியிருக்கிறது.

தள்ளுபடி செய்த கடன்கள் உட்பட வாராஐயக் கடளுக்கான நிதி ஒதுக்கீட்டு விகிதம் TPCR), ஆண்டு அடிப்படையில் 79.10% விருந் 593 bp அதிகரித்து. 850% ஆக பதிவாகியிருக்கிறது.

தள்ளுபடி கடன்கள் தவிர்த்த PCR ஆண்டு அடிப்படையில் ந866% விருந்து 310 bps உயர்கிறது. 71.77% ஆக இருக்கிறது.

வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் (AGM) பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டு, 40% டிவிடென்ட்டை வழங்க இயக்குனர்கள் குழு பரிந்துரைத்திருக்கிறது.”

சௌத் இந்தியன் பேங்க்
சௌத் இந்தியன் பேங்க்

டெபாசிட்கள்

ரீடெய்ல் டெபாசிட் ரூ.97,743 கோடியிலிருந்து, ரூ.7,007 கோடி வளர்ச்சியடைந்து ரூ 1,04,749,60 கோடியாக ஆண்டு அடிப்படையில் 7.17% அதிகரித்திருக்கிறது.

NRI டெபாசிட் ரூ. 29,697 கோடியிலிருந்து, ரூ 1,906 கோடி வளர்ச்சியடைந்து, ரூ. 31,603கோடியாக ஆண்டு அடிப்படையில் 6:42% அதிகரித்திருக்கிறது.

சேமிப்புக் கணக்கு டெபாசிட்கள், ரூ.26618 கோடியிலிருந்து, ரூ.27,699.31 கோடியாக உயர்ந்து ஆண்டு அடிப்படையில் 4.06% வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறது.

கடன்கள்

மொத்தக் கடன்கள், ரூ. 87,578.52 கோடியிலிருந்து, ரூ. 7,153 கோடி அதிகரித்து, ரூ. 87,578,52 கோடியாக ஆண்டு அடிப்படையில் 8.89% உயர்வைப் பதிவு செய்திருக்கிறது.

கார்ப்பரேட் நிறுவனங்கள் பிரிவுக்கான கடன்கள், ரூ.32,084 கோடியிலிருந்து, ரூ. 4,114 கோடி உயர்ந்து, ரூ.36,198 கோடியாக ஆண்டு அடிப்படையில் இது 12.82% வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது.

பெரிய கார்ப்பரேட் பிரிவில், A மற்றும் அதற்கு மேற்பட்ட தரநிலை கொண்ட கணக்குகளின் பங்கு 99.70% ஆக இருந்தது.

நகைக் கடன் பிரிவானது, ஆண்டு அடிப்படையில் 947% அதிகரிப்புடன் ரூ. 15,513 கோடியிலிருந்து, ரூ. 1,469 கோடி டி உயர்ந்து, சர்ந்து ரூ. 16,982 கோடியாக பதிவாகியிருக்கிறது. —

வீட்டுக்கான கடன்கள் ( பிரிவு, பிரிவு, ரூ.2794 ரூ.2794 கோடியிலிருந்து, கோடியிலிருந்து, ரூ.5083 கோடி உயர்ந்து ரூ.7877 –கோடியாக, 54.97% வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது.

வாகனங்களுக்கான கடன்கள் ரூ.1599 கோடியிலிருந்து, இந்த நிதியாண்டில் ரூ.1987 கோடியாக ஆண்டு அடிப்படையில் 24.32% வளர்ச்சி அடைந்திருக்கிறது.

வங்கி நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயலாக்க அதிகரி திரு. P.R. சேஷாத்ரி வெளியிட்ட அறிக்கை:

“நிதிசார் முடிவுகளை அறிவிக்கின்ற போது நிலைப்புத்தன்மையுள்ள இலாபமீட்டல், சிறப்பான சொத்து தரம், வலுவான கடன் புத்தகம் மற்றும் சிறப்பான ரீடெய்ல் கடன் பொறுப்பு போர்ட்ஃபோலியோ என்பவை குறித்ததாகவே எமது செயல்உத்தி தொடர்ந்து இருக்கும் என்பதை இங்கு பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எமது பிசினஸ் குறிக்கோள்களை திறனுடன் அடைவதற்கு எமது நிறுவன ரீதியிலான கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக நாங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்தி வருகிறோம்.

இந்த நிதியாண்டின்போது, ஆட்டோமொபைல்களுக்கான கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கடன் வழங்கல், கடன்கள், வீட்டுக்கடன்கள் மற்றும் தங்கநகைக் கடன்களுக்கான பிரிவில் தரமான சொத்துக்களைப் பெறுவதில் மிகுந்த கவனத்துடன் இலக்குப் பிரிவுகள் அனைத்திலும் நிலையான வளர்ச்சியினை இவ்வங்கி கண்டிருக்கிறது.

சௌத் இந்தியன் பேங்க்
சௌத் இந்தியன் பேங்க்

‘தரமான கடன் வளர்ச்சி வழியாக இலாபமீட்டல் நிலை என்ற எமது முக்கியமான குறிக்கோளுக்கு இணக்கமானதாக குறைவான இடர்வாய்ப்புள்ள பண்பியல்புகள் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு புதிய கடன்களை நாங்கள் வெற்றிகரமாக வழங்கி சமச்சீரான மற்றும் ஆரோக்கியமான கிரெடிட் போர்ட்போலியோவை உறுதி செய்திருக்கிறோம்.”

எங்கள் வங்கியின் நிதிசார் முடிவுகளுள், இதற்கு முற்றிலும் சொந்தமான SIBOSL என்ற துணை நிறுவனத்தின் நிதிசார் முடிவுகளும் உள்ளடங்கியவை.

நிதியாண்டு 25-ல் வங்கி பெற்றிருக்கும் முக்கிய விருதுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள்

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஏ பேங்கிங் டெக்னாலஜி விருதுகள் நிகழ்வில் ஐந்து விருதுகளை வென்று மீண்டும் தனது சிறப்பான செய் செயல்பாட்டை சௌத் இந்தியன் வங்கி நிரூபித்திருக்கிறது.

விருதுகளுள் சில:

சிறந்த தொழில்நுட்பத் திறன் மற்றும் நிறுவனம் (வெற்றியாளர்)

சிறந்த நிதிசார் உள்ளடக்கம் (இரண்டாவது இடம்)

சிறந்த டிஜிட்டல் விற்பனை, பணம் செலுத்தல்கள் & ஈடுபாடு (சிறப்பு பாராட்டுரை)

சிறந்த தகவல் தொழில்நுட்ப இடர் மேலாண்மை (சிறப்பு பாராட்டுரை)

சிறந்த நிதி தொழில்நுட்பம் மற்றும் DPI செயலாக்கம் (சிறப்பு பாராட்டுரை)

தொடர்ந்து இது போன்ற விருதுகளை வென்றிருப்பது, வங்கிச்சேவை தொழில்நுட்பத்தை முன்னெடுப்பதில் இவ்வங்கி கொண்டிருக்கும் பொறுப்புறுதியை நிலையாக அடிக்கோடிட்டுக காட்டுகிறது, மேலும், சௌத் இந்தியன் வங்கியால் வளர்த்து உருவாக்கப்பட்டிக்கும் டிஜிட்டல செயல்திறனை இவை முன்னிலைப்படுத்துகின்றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *