
லக்னோ: ராணுவ அதிகாரிகளை பாஜக சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் குறிவைப்பதாக சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. ராம்கோபால் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். ராணுவத்தின் சீருடையை 'சாதிவெறி கண்ணாடி' மூலம் பார்க்க முடியாது என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார்.
கர்னல் சோபியா குரேஷி ஒரு முஸ்லிம் என்பதால் பாஜக அமைச்சரால் குறிவைக்கப்பட்டதாகவும், விங் கமாண்டர் வியோமிகா சிங் ராஜ்புத் என்று நினைத்து விட்டுவிட்டதாகவும் சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. ராம்கோபால் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.