• May 16, 2025
  • NewsEditor
  • 0

இவரை எல்லாம் ஸ்டாலின் அத்தனை எளிதில் கைவைக்க மாட்டார் என நினைத்துக் கொண்டிருந்த துரைமுருகனின் வேலூர் மாவட்ட திமுகவினர், அவரது இலாகா மாற்றத்தால் சற்றே ஷேக் ஆகித்தான் கிடக்கிறார்கள்.

கருணாநிதி முதல்​வ​ராக இருந்த போது மூத்த அமைச்​சர் துரை​முரு​கன் தனித்த செல்​வாக்​குடன் வலம் வந்​தார். தனது அணுகு​முறை​களால் அடிக்​கடி அதிருப்​தி​களுக்கு ஆளா​னாலும் கருணாநிதி அவரை கடிந்து கொண்​ட​தில்​லை. காரணம், நெருக்​கடி​யான நேரங்​களில் கட்​சிக்​காக துரை​முரு​கன் தந்​திருக்​கும் பங்​களிப்பு அப்​படி. ஆனால், கருணாநி​தி​யின் மறைவுக்​குப் பிறகு கட்​சிக்​குள் துரை​முரு​க​னுக்​கான இருப்பு சரி​யத் தொடங்​கியது. அதைத் தெரிந்து கொண்டு பல நேரங்​களில் அவரும் வெளிப்​படை​யாகவே புலம்​ப​வும் ஆரம்​பித்​தார். “இன்​பநிதி அமைச்​சர​வை​யிலும் இந்த அவை​யில் இருப்​பேன்” என்று சொன்​னதெல்​லாம் அதன் வெளிப்​பாடு தான்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *