
சென்னை: “எல்லா தோல்விப் படங்களும் எனக்கு முதல் நாள் ஷூட்டிங்கின்போதே தெரிந்துவிடும். ஆனால், நம்மை மீறி செய்யும்போது நம்மால் எதுவும் செய்ய முடியாது” என்று நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் சந்தானம் கூறியது: “ஒரு படத்தின் கதையை படித்துவிட்டு முதல் நாள் ஷூட்டிங் போகும்போதே சொல்லிவிடுவேன், இந்த படம் தோல்வி அடையும் என்று. அதே போலத்தான் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தின் கதையை படித்துவிட்டு ராஜேஷிடம் சொன்னேன். காரணம், கதையில் பிரதான விஷயமே அடிவாங்கிவிட்டது.