• May 16, 2025
  • NewsEditor
  • 0

தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் ஆகிய இடங்களில் 9 செ.மீ., தருமபுரி மாவட்டம் அரூர், புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் 7 செ.மீ., காரைக்காலில் 6 செ.மீ., நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டம் கோவில்பட்டி, சேலம் மாவட்டம் சங்ககிரி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *