
கடந்த மே 7 டு மே 10-ம் தேதி இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே இருந்த பதற்ற நிலையில், பாகிஸ்தானுக்கு மிகுந்த ஆதரவை வழங்கியிருந்தது துருக்கி.
இதற்கு பதிலடி தருவது போல, இந்தியாவில் உள்ள துருக்கி நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதியை ரத்து செய்துள்ளது இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம்.
என்ன நிறுவனம் அது?
செலிபி கிரவுண்ட் ஹேண்ட்லிங் இந்தியா பிரைவெட் லிமிடெட் என்பது தான் அந்த நிறுவனம். இது துருக்கி சார்ந்த நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள ஒன்பது முக்கிய விமான நிலையங்களில் இயங்கி வருகின்றன.
இந்த நிறுவனத்தின் கீழ் செலிபி விமான நிலையம் சேவை நிறுவனம் மற்றும் செலிபி டெல்லி கார்கோ டெர்மினல் என இரு நிறுவனம் இயங்கி வருகிறது. முதலாவதாக கூறப்பட்டுள்ள நிறுவனம் விமானங்கள் தரையில் இருக்கும்போது அதற்கு தேவையான சேவைகள் மற்றும் நடவடிக்கைகள் செய்யும் நிறுவனம் ஆகும்.
செலிபி டெல்லி கார்கோ டெர்மினல் மேனேஜ்மென்ட் இந்தியா நிறுவனம் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் நடைபெறும் கார்கோ சேவைகளை கவனித்துகொள்ளும்.
இனி என்ன ஆகும்?
இந்த இரு நிறுவனங்களின் பாதுகாப்பு சேவையும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், இனி இரு நிறுவனங்களும் தாங்கள் இதுவரை இந்தியாவில் வழங்கி வந்த சேவைகளை இனி வழங்க முடியாது.
இத்துடன் இது முடிந்துவிடவில்லை. இந்தியாவில் துருக்கிக்கு எதிரான குரல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கின்றன. மேலும், கடந்த சில தினங்களில் இந்தியாவில் உள்ள பல பல்கலைக்கழகங்கள் தங்களுக்கு துருக்கி கல்வி நிலையங்களுடன் இருந்த ஒப்பந்தங்களை ரத்து செய்தன.