
சென்னை: சந்தானம் நடிப்பில் நாளை வெளிவரவுள்ள ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’படத்தில் இருந்து, சர்ச்சைக்குரிய பாடலை மியூட் செய்து நீக்கிவிட்டதாக படத் தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
நடிகர் சந்தானம் நடித்துள்ள 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' திரைப்படம் நாளை (மே 16) வெளியாகிறது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள, ‘கோவிந்தா… கோவிந்தா.’ பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த பாடல், பெருமாளை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாக கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.ஜி.டி.பாலாஜி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.