
சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற புதிய பயனாளிகள் சேர்ப்பு பணிகள் நடைபெற இருக்கும் நிலையில், கூடுதலாக ஒதுக்கியது ரூ.7 கோடி மட்டுமே, அதைக் கொண்டு எத்தனை பேருக்கு தமிழக அரசு உரிமைத் தொகை வழங்கும் என்று பாமக நிறுனவர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசால் செயல்படுத்தப்படும் மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகளைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் வரும் ஜூன் 4 ஆம் நாள் முதல் பெறப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்தத் திட்டத்திற்காக கூடுதல் நிதியே ஒதுக்காமல் புதிய பயனாளிகள் சேர்க்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதை மக்களை ஏமாற்றும் செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது.