
சென்னை: தமிழகத்தில் ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோயில்களில் அனைத்து சாதி அர்ச்சகர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.
தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வகையில் 2006-ல் முதல்வராக இருந்த மு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசு சட்டம் இயற்றியது. தொடர்ந்து அரசாணையும் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு மாணவர்களின் தகுதி, பாடத்திட்டம், பயிற்சிக்காலம், பூஜைமுறைகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து பரிந்துரைகள் வழங்கியது.