• May 14, 2025
  • NewsEditor
  • 0

78-வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் நேற்றைய தினம் தொடங்கியது. கடந்தாண்டு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் உயரிய கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்று பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார் இயக்குநர் பயால் கபாடியா.

இவர் இந்தாண்டு தொடங்கியிருக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு ஜூரியாக வந்திருக்கிறார்.

Payal Kapadia

கேன்ஸ் திரைப்பட விழாவில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இயக்குநர் பயால் கபாடியா இன்று சில விஷயங்களைப் பேசியிருக்கிறார்.

அவர் பேசுகையில், ” எங்கள் படம் கேன்ஸுக்கு வந்து அங்கீகாரம் பெற்றது, பத்திரிகையாளர்கள் அனைவரும் அதைப் பற்றி எழுதியது, படத்தை வெளியிடுவதற்கு மிகவும் உதவியது.

இந்தியாவில் விநியோகமும் இதனால் பெரிதும் பயனடைந்தது. அதனால், நான் மிகவும் நன்றியுடன் இருக்கிறேன்.

ஒரு படைப்பாளியாக, உங்கள் படம் உங்கள் நாட்டிலும், உலகம் முழுவதிலும் பார்க்கப்பட வேண்டும் என்பது முக்கியம்.

All we imagine as light
All we imagine as light

எனவே, இது எனக்கு மிகப் பெரிய பலனாக இருந்தது. தற்போது, நான் எனது நகரமான மும்பையை அடிப்படையாகக் கொண்டு மேலும் இரண்டு படங்களில் பணியாற்றி வருகிறேன்.

இது ஒரு ட்ரையாலஜி போல இருக்கும். ஆனால் வெவ்வேறு கதாபாத்திரங்களுடன் மும்பை ஒரு சிக்கலான, முரண்பாடுகள் நிறைந்த நகரம். இன்னும் ஆராய வேண்டியவை நிறைய இருக்கின்றன” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *