• May 14, 2025
  • NewsEditor
  • 0

அமெரிக்காவில் இந்த மாத தொடக்கத்தில் நடந்த `மெட் காலா’ என்ற நிகழ்ச்சியில் பாலிவுட், ஹாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

அங்கு நடந்த பேஷன் ஷோவில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதல் முறையாக கலந்து கொண்டார். நிதி திரட்டுவதற்காக நடந்த பேஷன் ஷோவில் ஷாருக்கான் சிவப்பு கம்பளத்தில் வாக்கிங் சென்றார்.

ஷாருக்கான்

அவர் பெங்கால் புலி வடிவத்தில் வடிவமைக்கப்பட்ட 18 காரட் தங்கத்தில் செய்யப்பட்ட வாக்கிங் கம்பு ஒன்றை கையில் வைத்துக்கொண்டு பாலிவுட்டில் கிங் என்பதை உறுதிபடுத்தும் வகையில் கே என்ற எழுத்து பொறிக்கப்பட்ட நெக்லஸ் அணிந்து வாக்கிங் சென்றார்.

பாலிவுட்டில் இருந்து ஒருவர் இந்த பேஷன் ஷோவில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். ஷாருக்கான் இந்த பேஷன் ஷோவில் பங்கேற்றதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அதற்கு 5.3 மில்லியன் லைக் வந்திருந்தது. அதோடு ஷாருக்கான் மூலம் இந்த நிகழ்ச்சியில் 19 மில்லியன் டாலர் நிதி திரட்டப்பட்டுள்ளது.

லிஷா

இந்த நிதி திரட்டும் பேஷன் ஷோ மூலம் மொத்தம் 1.3 பில்லியன் டாலர் அளவுக்கு நிதி திரட்டப்பட்டது. இதில் ஷாருக்கான் மூலம் தான் அதிக பட்சமாக 19 மில்லியன் டாலர் அளவுக்கு நிதி திரட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்ற பெருமை ஷாருக்கானுக்கு கிடைத்து இருக்கிறது. ஹாலிவுட்டில் யாரும் இந்த அளவுக்கு நிதி திரட்டிக்கொடுக்கவில்லை. கார் பந்தய வீரர் லெவிஸ் ஹெமில்டன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவர் 9.4 மில்லியன் நிதி திரட்டி கொடுத்தார்.

மூன்றாவது இடத்தில் பஞ்சாப்பை சேர்ந்த பாடகர் தில்ஜித் வந்துள்ளார். பெண்கள் பிரிவில் தாய்லாந்தை சேர்ந்த பாடகி லிஷா முதலிடம் வந்துள்ளார். அவர் 21 மில்லியன் டாலர் அளவுக்கு நிதி திரட்டியுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *