
நடிகர்களிடம் தயாரிப்பாளர்கள் உண்மையைச் சொல்ல வேண்டும் என்று ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ நன்றி அறிவிப்பு விழாவில் சசிகுமார் பேசினார். நடிகர்களின் சம்பளம் குறித்த அவரது கருத்து பல்வேறு தரப்பினரையும் ஈர்த்துள்ளது.
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், ரமேஷ் திலக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு.