
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பாலையாவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, சிம்ரன், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இப்படத்துக்கு வசூல் ரீதியில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக, தமிழகத்தில் அதிக வசூல் செய்த அஜித் படம் என்ற சாதனையையும் படைத்தது. இந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் அஜித் படத்தையே இயக்கவுள்ளார் என்ற தகவல் பரவியது. இதனிடையே, தனது அடுத்த படத்தையும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கே இயக்கவுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்.
அவர் வைத்திருந்த கதை ஒன்றை பாலையாவிடம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று இருக்கிறது. இது சுமுகமாக முடியும் பட்சத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் – பாலையா கூட்டணி இணைந்து பணிபுரிய இருக்கிறது. பாலையா படம் பேச்சுவார்த்தையில் இருப்பதால், அஜித் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் எப்போது தொடங்கவுள்ளார் என்பது விரைவில் தெரியவரும்.