
சென்னை: “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தவிர்க்க முடியாதவர்.” என்று, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம், சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று (மே 14) தொடங்கியது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 19 மாவட்ட செயலாளர்கள் மற்றும் புதுச்சேரி மாநில நிர்வாகிகள் ஆகியோருடன் தனித்தனியாக பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.