
ராமேசுவரம்: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களுக்கான உதவித் தொகையை தமாதமின்றி வழங்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களின் குடும்பத்திற்கு, தமிழக அரசின் உதவித் தொகையாக ரூ.350 மீனவளத் துறை மூலம் வழங்கப்படுகிறது. இந்த தொகை மீனவர்கள் சிறைக்குள் இருக்கும் நாட்களை மொத்தமாக கணக்கீடு செய்து நாள் ஒன்றுக்கு ரூபாய் 350 வீதம் அந்தந்த பகுதி மீன்வளத் துறை அலுவகம் மூலம் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.