• May 14, 2025
  • NewsEditor
  • 0

வரலட்சுமி, சுஹாசினி, ஸ்ருதி ஹரிஹரன் எனப் பலரும் நடித்திருக்கும் படம் ‘தி வெர்டிக்ட்’ .

முழுக்க முழுக்க அமெரிக்காவிலேயே படமாக்கியிருக்கிறார்கள். ஹாலிவுட் நடிகர்கள் பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் கிருஷ்ண சங்கர். அமெரிக்காவில் வசித்து வரும், சென்னைக்காரர்.

தி வெர்டிக்ட் பட யூனிட்

”பூர்வீகம் சென்னைதான். அப்பா, அம்மா ரெண்டு பேருமே தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்கள். நாடகத்துறையிலிருந்து வந்தததால, எனக்கு நடிப்பு மீது ஆர்வம் இயல்பாகவே துளிர்த்துவிட்டது.

எழுத்தாளர் சாவியின் ‘வாஷிங்டனில் திருமணம்’, ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்திருக்கிறது. அந்த நாடகம் ஒரு காலத்தில் டி.வி. சிரீயலாகவும் வெளியாகியிருகிறது.

அதில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கேன். அதன் பிறகு அமெரிக்காவிற்குப் படிக்கப் போனே. அப்படியே அங்கேயே செட்டில் ஆகிட்டேன்.

படத்தில் சுஹாசினி
படத்தில் சுஹாசினி

‘தி வெர்டிக்ட்’ படத்தின் கதையை ஆங்கிலத்தில் மட்டும் எடுக்கலாம் என்றுதான் நினைத்தேன்.

இது அமெரிக்காவில் நடக்கும் கதை. அமெரிக்க நீதிமன்றத்தில் படமாக்க வேண்டியிருந்தது. அமெரிக்க நீதிமன்றங்களைத் தமிழ் சினிமாவிற்குப் புது களமாகவும், புது விஷயங்களாகவும் இருக்கும் என நினைத்தேன்.

தயாரிப்பாளர்கள் பிரகாஷ் மோகன்தாஸ், கோபி கிருஷ்ணன் இருவரும் கொடுத்த சுதந்திரத்தில் வரலட்சுமி, சுஹாசினி, ஸ்ருதிஹரிஹரன் எனக் கதைக்கான நட்சத்திரங்கள் அமைந்தார்கள்.

நம்மூர் நடிகர்கள் நிறையப் பேர் நடிச்சிருந்தாலும், ஹாலிவுட் நடிகர்களும் நிறைய பேர் படத்தில் இருக்காங்க. படப்பிடிப்பை அமெரிக்காவின் டெக்ஸாசில் 24 நாட்களுக்குள் எடுத்து முடிச்சிட்டோம்.

ஆனால் ஒரு வருட உழைப்பு, திட்டமிடலுக்குப் பின்னரே இது சாத்தியமானது. ஹாலிவுட் நடிகர்கள் பலரும் நம்மூர் ஆட்களின் நடிப்பைப் பார்த்து ஆச்சரியமானாங்க.

கிருஷ்ண சங்கர்
கிருஷ்ண சங்கர்

ஹாலிவுட் நடிகர்கள், கேமராமேன் தவிர மற்ற தொழில்நுட்ப ஆட்கள் எல்லோருமே ஆங்கிலப் படங்கள்ல பணிபுரியறவங்க தான்.

அமெரிக்கா நீதிமன்ற முறை வித்தியாசமானது. இங்குள்ளது போல நடைமுறை இல்லை. அங்கே நீதிபதி தவிர ஜூரி கமிட் இருப்பார்கள். அதில் 12 பேர்கள் இருப்பார்கள்.

அவர்கள் கொடுக்கும் ரிப்போர்ட் அடிப்படையில்தான் நீதிபதி தீர்ப்பை வழங்குவார். அமெரிக்கா கோர்ட்டில் வழக்காடும் முறை, தமிழ் சினிமாவில் பார்த்திராத ஒன்று.

அமெரிக்காவில் படப்பிடிப்புகளுக்குப் போலீஸிடம் பர்மிஷன் வாங்குவது ரொம்பவே எளிதான அணுகுமுறைதான். ரோட்டுல என்ன படமாக்கப்போறோம் என்பதைப் பக்காவாக அவங்ககிட்ட சொன்னால் போதும், நமக்குப் பாதுகாப்பிற்கு ஒரு போலீசையும் போட்டு அனுமதி கொடுத்திடுவாங்க.

அமெரிக்காவில் தமிழ்ப் படங்களுக்குப் பெரும் வரவேற்பு இருக்கு. ‘குட் ஃபேட் அக்லி’யை தொடர்ந்து ‘டூரிஸ்ட் ஃபேமிலி’யும் இங்கே ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ் குடும்பங்கள் தங்களின் குடும்பத்தோடு தியேட்டருக்குப் போய் படங்களைப் பார்த்து ரசிக்கிறாங்க.

இந்தப் படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடந்தது சந்தோஷமா இருக்கு. யூகி சேது சார், பார்த்திபன் சார் எனப் பலரும் நிகழ்வுக்கு வந்திருந்து எங்களை வாழ்த்தினது சந்தோஷமா இருக்கு” என்கிறார் கிருஷ்ண குமார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *