• May 14, 2025
  • NewsEditor
  • 0

கடந்த 22 ஆம் தேதி தொடங்கிய 18-வது ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது.

இதனிடையே இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக  பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

பஞ்சாப் vs டெல்லி

மேலும் ஐபிஎல் தொடர் ஒருவாரக் காலத்திற்கு நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்திருந்தது.

இதனிடையே இந்தியா- பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்ததைத் தொடர்ந்து மே 17-ஆம் தேதி திட்டமிட்டபடி இந்த ஐபிஎல் தொடரானது தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்திருக்கிறது.

இந்நிலையில் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் DJ, பெண்கள் நடனம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இதுதொடர்பாகப் பேசியிருக்கும் அவர், ” ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும்போது அவற்றில் DJ, பெண்கள் நடனம் என எதுவும் இருக்கக் கூடாது என விரும்புகிறேன்.

தீவிரவாத தாக்குதலில் சிலர் தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்துள்ளனர். அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஐபிஎல் போட்டிகளில் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *