• May 14, 2025
  • NewsEditor
  • 0

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த வாரம் (மே 8) வெளியானது. இதில், 4,05,472 (96.70%) மாணவிகளும், 3,47,670 (93.16%) மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். அரசுப் பள்ளிகளில் 91.94 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

மாவட்ட அளவில், அதிகபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 98.82 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில், 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிகள் வெளியாகும் தேதி மற்றும் இணையதளம் குறித்த அறிவிப்பை மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.

பொதுத்தேர்வு முடிவுகள்

அந்த அறிவிப்பில், “மார்ச்/ஏப்ரல் 2025-ல் நடைபெற்ற 2024-25ம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு (SSLC) மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) பொதுத்தேர்வு முடிவுகள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 16.5.2025 (வெள்ளிக்கிழமை) அரசுத் தேர்வுகள் இயக்ககம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் காலை 9 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

`10-ம் வகுப்பு முடிவுகள் – 16.5.2025 காலை 9 மணி – இணையதள முகவரி – https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in‘.

11-ம் வகுப்பு முடிவுகள் – 16.5.2025 பிற்பகல் 2 மணி – இணையதள முகவரி – https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in‘.

தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும், குறுஞ்செய்தி வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *