
திருச்சி, மேல கல்கண்டார் கோட்டையைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 42). இவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு துணிக்கடை நடத்தி வந்தார்.
இவருக்கு விக்டோரியா (வயது: 35) என்ற மனைவியும் ஆராதனா (வயது: 9), ஆலியா (வயது: 3) என்ற இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
விக்டோரியா ரயில்வே ஊழியராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தான் நடத்தி வந்த துணிக்கடையில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டதால் அலெக்ஸ் அந்தக் கடையை மூடி விட்டார்.
அந்த வியாபாரத்திற்காகப் பல இடங்களில் கடன் வாங்கியதால் அவருக்கு அதிக அளவு கடன் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் மேலும் கடன் வாங்கி திருச்சியில் சொந்த வீடு ஒன்றையும் அலெக்ஸ் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால், அலெக்ஸூக்கும், அவருடைய மனைவி விக்டோரியாக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில்தான், கடன் அதிகமாக இருந்த சூழலில் நேற்று இரவு தம்பதிகள் இருவரும் தங்கள் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாங்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
நான்கு பேரும் இறந்து கிடந்ததை அறிந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், அங்கு இறந்து கிடந்த நான்கு பேரின் உடல்களைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்திற்குக் கடன் பிரச்னைதான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்தும் போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் திருச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs