
`சுந்தரி’ தொடரின் மூலம் பலருக்கும் பரிச்சயமானவர் ஜிஷ்ணு மேனன். தற்போது சன் டிவியில் வரவிருக்கும் தொடர் ஒன்றிலும் இவர் நடிக்க இருக்கிறார். ஜிஷ்ணுவுக்கும் செலிபரிட்டி மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அபியாதிராவுக்கும் பெற்றோர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. ஜிஷ்ணு கேரளாவைச் சேர்ந்தவர் என்பதால் அந்த முறைப்படி கேரளாவில் இவர்களுடைய திருமணம் நடைபெற்றிருக்கிறது.
சின்னத்திரை நடிகர்களுக்கு மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக இருப்பவர் அபியாதிரா. மேக்கப் தொடர்பான வகுப்புகளையும் இவர் எடுத்து வருகிறார். இவரும் ஜிஷ்ணுவும் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்போது இவர்களுடைய திருமணம் நடைபெற்றிருக்கிறது.
நண்பர்களாக பயணித்தவர்கள்..!
நண்பர்களாக பயணித்தவர்கள் தற்போது கணவன் – மனைவியாக தங்களது புது வாழ்க்கையை தொடங்கவிருக்கிறார்கள். பாசிட்டிவ், நெகட்டிவ் என எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டு பெர்ஃபார்ம் பண்ணக் கூடியவர் ஜிஷ்ணு. விரைவிலேயே வரவிருக்கும் புதிய தொடரில் இவருடன் நடிகை ரேஷ்மா மதன் நடிக்க இருக்கிறார்.
`சுந்தரி’ தொடரில் இவருடன் நடித்திருந்த நடிகர்கள் உட்பட பல சின்னத்திரை பிரபலங்கள் இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருக்கிறார்கள்.

வாழ்த்துகள் ஜிஷ்ணு – அபியாதிரா!