• May 14, 2025
  • NewsEditor
  • 0

தமிழ் சினிமாவில் சமகால முன்னணி இசையமைப்பாளர்களில் குறிப்பிடத்தக்கவர் சந்தோஷ் நாராயணன். சமீபத்தில் இவரது இசையில் வெளியாகியிருந்த ரெட்ரோ திரைப்படத்தின் பின்னணி இசையும், பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இவரது இசைக்கென்று தனி ரசிகர் கூட்டம் இருப்பது போல, இவரது குரலில் உருவாகும் பாடல்களுக்கென்றும் தனியாக ரசிகர்கள் இருக்கின்றனர்.

சந்தோஷ் நாராயணன்

ரெட்ரோ படத்தில், `கனிமா’, `தி ஒன்’ ஆகிய பாடல்கள் இவரின் குரலில் ட்ரெண்ட் ஆனது. இந்த நிலையில், இலங்கையில் ஒரு இளைஞர் சந்தோஷ் நாராயணனைப் பாடகர் உதித் நாராயன் என்று நினைத்துப் பேசிய சம்பவத்தை, சந்தோஷ் நாராயணனே தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அந்தப் பதிவில் சந்தோஷ் நாராயணன், “கொழும்புவின் (Colombo) வீதியில் நேற்று நடந்துகொண்டிருந்தேன். அப்போது, ஒரு இளைஞர் ஓடிவந்து, அவசர அவசரமாக செல்போனை எடுத்து, `உதித் நாராயன் சார், உங்களுடைய பாடல்களெல்லாம் ரொம்ப பிடிக்கும்’ என்றார். என்னைப் பாடகராக அங்கீகரித்ததில் இப்போது எனக்கு மகிழ்ச்சி” என்று ஜாலியாகப் பதிவிட்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *