
புதுடெல்லி: இந்தியாவின் அதிநவீன வான் பாதுகாப்பு கவசமான 'ஆகாஷ்தீர்', அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.
கடந்த 7, 8, 9, 10 ஆகிய தேதிகளில் இந்தியா, பாகிஸ்தான் இடையே அதிதீவிர போர் நடைபெற்றது. இந்த போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனாவும் துருக்கியும் நேரடியாக களம் இறங்கின. துருக்கியின் சார்பில் அதிநவீன பைகார் யிஹா3 ரக ட்ரோன்கள் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டன.