
பெங்களூரு: பத்மஸ்ரீ விருது பெற்ற வேளாண் விஞ்ஞானி சுப்பண்ணா ஐயப்பன் (70) மைசூரு அருகே காவிரி ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த சுப்பண்ணா ஐயப்பன் (70) இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின்(ஐசிஏஆர்) இயக்குநராக இருந்தவர். நாட்டின் மீன் வளத்தை பெருக்குவதில் முக்கிய பங்காற்றிய 'நீலப்புரட்சி'க்கு வித்திட்டவர்களில் இவர் குறிப்பிட்டத்தக்கவர். இவரது வேளாண் துறை பங்களிப்பாக மத்திய அரசு பத்மஶ்ரீ விருது வழங்கியுள்ளது.