• May 13, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

வரலாறு நெடுக மிகப்பெரிய யுத்தங்களும் போர்களும் ரத்தத்தின் நிழலில் நடந்துள்ளன.

அவ்வரிசையில், இன்று நடைபெற்று கொண்டிருக்கும் பனிப்போர் – சேமிப்பவர்களுக்கும் செலவு செய்பவர்களுக்கும் இடையே. இரு வேறு துருவங்களில் பயணிக்கும் இந்த இரண்டு குழுக்கள் ஒருவரை ஒருவர் பழித்துக் கொள்ளும் பண்டைய பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது.

உலகம் முழுவதிலும் இந்த போர் நடைபெற்று கொண்டிருப்பதாயினும், நாம் முதலில் நம் ஊரைப் பற்றி பேசுவோம்.

‘இன்று’ என்பதை மனதில் வைத்து பயணிக்கும் செலவாளிகளும் ‘நாளை’ என்பதை நினைவில் வைத்து திட்டமிடும் சேமிப்பவர்களும் இக்காலத்தில் நிறைய இருக்கிறார்கள்.

வாழ்க்கை ஒரே முறை தான், அதை முழுமையாக அனுபவிக்க வேண்டும்!

ஆசைப்படும் அனைத்தையும் கடன் வாங்கியாவது அனுபவிக்கவேண்டும் – இதுதான் இன்றைய எண்ணம்.

‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்பதை தாரக மந்திரமாக ஏற்று, ‘பார்ப்பதற்கு எல்லாம் ஆசைப்படும்’ ஆக்கமாக மாறிய குழுவும் அதிகரித்துள்ளது.

மாறுபட்ட பார்வையில், சிலர் பணத்தை செலவுசெய்யாமல் சேமித்து வைத்து முதலீடு செய்வதுமாய் இருக்கிறார்கள்.

எது சரி? எது தவறு?

எளிமையாகச் சொல்வதானால், எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் வார்த்தையை போல:

“உங்கள் சரி எனக்கு தவறு.”

பரம்பரை மனப்பான்மையின் மாறுதல்

பரவலாக, நல்ல சூழலில், அடிப்படை தேவைக்கு ஆபத்து இல்லாமல் இருக்கிறோம் நாம். உணவு, உடை, உறைவிடம் என்பதே அடிப்படை தேவை. தற்போது வண்டி, வாகனங்களும் அதில் சேர்க்கப்பட்டுள்ளன. இது தான் நம் தமிழ்ச்சமூகத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சி.

நம் தாத்தா-பாட்டிகள் காலத்தில், கடின உழைப்புடன் பணம் சேமித்து, பிறகு செலவிடத் தொடங்கினர். அவர்களின் எண்ணம், பிள்ளைகள் நல்ல கல்வி பெற்று செல்வாக்குடையவர்களாக வளர வேண்டும் என்பதே இருந்தது.

அவர்களைப் பார்த்து வளர்ந்த நம் தாய் தந்தையர்கள் அதையே பின்பற்றினர். கல்வியின் அவசியத்தை உணர்ந்து, சிறந்த பள்ளி-கல்லூரிகளில் நம்மை படிக்கவைக்க வேண்டும் என்பதற்காக கடன் வாங்கத் தொடங்கினர்.

அதற்கிடையில் திருமணம், மருத்துவ செலவுகளும் சேர்க்கப்பட்டன. குடும்பத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்ல கடன் தேவைப்பட்டது.

ஆனால் இன்று!

பக்கத்தில் இருப்பவன் நம்மை கவறும் வகையில் ஏதாவது ஆடம்பரமாக வைத்து இருந்தால் போதும் ! நமக்கு தேவையே இல்லை என்றாலும் போட்டிக்கு நாமும் அவற்றை வாங்குவது –Play Station, பைக், கார், போன் என்று, அடுத்தவன் வைத்திருக்கிறான் நம்மிடம் அவை இல்லையென்ற எண்ணத்தில், தேவையில்லாமல் அனைத்தையும் கடனில் வாங்கி வைப்பதையே பழக்கமாக்கியிருக்கிறோம்.

ஆங்கிலத்தில், ‘Appreciating Assets’ மற்றும் ‘Depreciating Assets’ என்று சொல்வார்கள்.

இன்றைக்கு நீங்கள் வாங்கும் பொருளின் மதிப்பு, நாளை கூட வாய்ப்பு இருந்தால் ‘Appreciating Asset’, இல்லையெனில் ‘Depreciating Asset’.

இது தான் அடிப்படை வித்தியாசம்.

நம் வாழ்க்கையை நமக்கேற்றபடி வாழாமல், அடுத்தவனை ஜெயிப்பதாக எண்ணி வாங்குவது.

உண்மையைச் சொன்னால், நாம் பிறரை வெல்லவில்லை – நாம் நம்மிடமே தோற்றுக்கொண்டிருக்கிறோம்.

“அடுத்தவரைப் போல இருக்க நினைப்பதில் வாழ்க்கை முடிகிறது;

நம்மைப் போல வாழ நினைப்பதில் வாழ்க்கை தொடங்குகிறது.”

வாங்கிய கடனை எப்படி அடைப்பது? வாங்கிய கடனை அடைக்க இன்னொரு கடன் வாங்கலாமா? நாளைக்கு EMI due date, பணம் கட்ட வேண்டும்! என்று டென்ஷன், ஸ்ட்ரெஸ் எடுத்து கொண்டு தூங்காமல் யோசிப்பது. இப்படி பல நாள் தூங்காமல், எப்போதும் இதே சிந்தனையில் பயத்துடனும் பதட்டத்தோடும் வாழ்வது. சிரித்து பேச நேரம் இல்லாமல், வேலை வேலை என ஓடி, குடும்பத்தாரிடம் நேரம் செலவிடாமல் இருப்பது!

வாழ்க்கை வாழ்வதற்கே!

நிம்மதியான வாழ்க்கையே அனைவரின் ஆசை –8 மணி நேர தூக்கம், ஆரோக்கியமான உணவு, அழகான குடும்பம் என்பவற்றை முக்கியமாக கருதாமல், பல தேவையற்ற ஆசைகளில் மூழ்கிக்கொண்டிருக்கிறோம்.

“அப்போ என்ன சொல்ல வரீங்க? நான் enjoy பண்ண கூடாதா?

We live once, need to live to the fullest” – என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது.

செலவு செய்யுங்கள் – தவறில்லை.

கடன் வாங்குங்கள் – தவறில்லை.

ஆனால் அதை எதற்காக, எப்படிச் செய்கிறோம் என்பதில்தான் வித்தியாசம் இருக்கிறது.

“கடன் அன்பை முறிக்கும்” என்பார்கள். இன்று அந்த கடன் பல குடும்பங்களை முறித்து கொண்டு இருக்கிறது. “ஆசையே துன்பத்திற்கு காரணம்” என்கிறார் புத்தர். நாம் எல்லோரும் புத்தர் இல்லை தான். ஆனால் கொஞ்சம் ஆழமாக யோசித்தால், இன்று நாம் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஆணி வேர் ஆசையே!

நம் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய, வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல கடன் வாங்கினால் பிரச்சனை இல்லை. ஆனால் தேவையில்லாத விஷயங்களுக்காக கடன் வாங்குவது தான் அபாயம்.

“அளவுக்கு மீறினால், அமிர்தம் கூட நஞ்சாக மாறும்.”

முடிவுரை: சமநிலையான வாழ்க்கைதான் நல்வாழ்வு

பணத்தைச் சேமித்து பழகியவர் ஒரு நாள் செலவு செய்ய நினைத்தால், அவரிடம் பணம் இருக்கும். ஆனால் செலவினால் வாழ்வதை பழக்கமாக்கியவர், ஒரு நாள் சேமிக்க நினைத்தாலும் முடியாது. முதலீடும் முடியாது.

இன்றையும் நாளையையும் சேர்த்து யோசித்தால், நலமுடன் மட்டும் இல்லாமல், “வளமுடனும் வாழலாம்”.

அன்புடன்,

ச.ஹரிஹரன் ஷங்கர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *